Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரதேச சபையின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் நிறைவேற்றத் தவறும் தவிசாளர், பிரதேச சபைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய தனது பதவியை இராஜினாமா செய்தவராகவே கருதப்படுவார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமது பதவி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்தே உயர் நீதிமன்றம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வியாழக்கிழமை (18) அன்று வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி,

ஹிங்குராங்கொட பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுசந்த ஞானரத்ன, 2014 ஆம் ஆண்டு தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை எதிர்த்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். பிரதேச சபையின் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் பெறத் தவறியமை காரணமாக, அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாகக் கருதப்படும் என்ற வடமத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 2014 ஆம் ஆண்டு அறிவிப்புக்கு எதிராகவே அவர் இந்த நிவாரணத்தைக் கோரியிருந்தார்.

நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை ஏகமனதாகத் தள்ளுபடி செய்தது. பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை சட்டரீதியான காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத் தவறியதன் மூலம், மனுதாரர் சட்டத்தின் பிரகாரம் தனது தவிசாளர் பதவியை இழந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம், பிரதேச சபைகள் சட்டத்தின் 169 ஆம் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின்படி, ஒரு சபையின் பதவிக்காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு சந்தர்ப்பங்களில் வரவு செலவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் பெறத் தவறும் தவிசாளர், தனது பதவியை இராஜினாமா செய்தவராகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
Next Post
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு