Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மேலும் திறம்பட கண்காணிக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஒழுங்குமுறைகளின்படி, இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுக்கும் வங்கிகள் மூலம் தனித்துவமான சிறப்பு பரிவர்த்தனை எண் வழங்கப்பட வேண்டும்.

மேலும், அந்த பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் கட்டாயமாக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் விவரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவு தொகை, பயன்படுத்தப்படும் நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவு செய்யப்பட்ட திகதி, தற்காலிக விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக, இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு இல்லாத இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக வங்கிகள் ஊடாக முற்கொடுப்பனவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19) முதல் அமுலுக்கு வரும் இந்த உத்தரவுகள் மூலம், இறக்குமதி துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை முறையாகக் கண்காணிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
Next Post
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு