இன்று (21) நள்ளிரவு முதல் கோழி இறைச்சியின் விலை அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பானது கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.