Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் எதிர்பாராத விதமாக அதிகரித்து வரும் நிலையில், சிக்குன்குனியா நோயும் மீண்டும் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர, டெங்குவுடன் சேர்த்து சிக்குன்குனியா நோய்த்தாக்கமும் தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு பரவும் அபாய நிலை தீவிரமாகக் காணப்படுவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய ஜூன் 24 முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 48,287 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 29 மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

பதிவான மொத்த நோயாளர்களில் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், அந்த எண்ணிக்கை 25,167 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், டெங்கு அதிஅவதான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சில மருத்துவமனைகளின் கொள்ளளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரஹித ராஜபக்‌ஷ கைது!

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரஹித ராஜபக்‌ஷ கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு