முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பணம் கோரிய வழக்கில் செலுத்த வேண்டிய ரூ.10 மில்லியன் நஷ்டஈட்டுத் தொகையை 2027 ஜூலை 6ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரசன்ன ரணதுங்கவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நஷ்டஈடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ரூ.10 மில்லியன் நஷ்டஈட்டுத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தத் தவறினால், 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, நஷ்டஈட்டுத் தொகையில் ரூ.4 மில்லியன் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








