Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!

3 months ago
in செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (07) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகள் தலாவ, கரந்தெனிய, புளியங்குளம் மற்றும் ஆனமடுவ பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

அனுராதபுரம் – தலாவ பிரதான வீதியின் சுனாமி சந்திக்கு அருகே, கெப் ரக வாகனமொன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஹிதோகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கரந்தெனிய மடக்கும்புர – கொடவெல குறுக்கு வீதியில், முன்னால் சென்ற மிதிவண்டியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 50 வயதுடைய மிதிவண்டி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், ஏ-09 வீதியின் ராமநூர் பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற 48 வயதுடைய பாதசாரி மீது மோதியுள்ளது. மோதலின் தாக்கத்தில் அவர் எதிரே வந்த காரில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, ஆனமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடிகம – கீரியன்கள்ளிய வீதியில், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நான்கு விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!
செய்திகள்

பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!

October 6, 2026
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

October 6, 2026
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!
செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!

October 6, 2026
Next Post
இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!

இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு