Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் குறித்த கைதி உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இன்று (08) காலை 7.30 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 1,033 கைதிகள் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 7 சிறைசாலை அதிகரிகள் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும், காயமடைந்த சுமார் 100 பேரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

August 22, 2026
காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!
செய்திகள்

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

August 22, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

August 22, 2026
கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
செய்திகள்

கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

August 22, 2026
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்!
செய்திகள்

யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்!

August 22, 2026
சமிட்புர சதுவின் தகவலுக்கு அமைய மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!
செய்திகள்

சமிட்புர சதுவின் தகவலுக்கு அமைய மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!

August 22, 2026
Next Post
ஈரானில் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரம்!

ஈரானில் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு