Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சா/த பரீட்சை பெறுபேறு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவு!

சா/த பரீட்சை பெறுபேறு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் (08) நிறைவடைகிறது.

கடந்த ஜூன் 25ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அனைவரும் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வேறு எந்த முறையிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ள “Exam Information Centre” ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். புதிய விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல் காணொளியைப் பார்வையிடுவது அவசியம் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனைக் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கடன் அட்டை, வரவு அட்டை அல்லது தபாலகங்கள் ஊடாக கட்டணத்தைச் செலுத்த முடியும்.

கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவானதை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், செலுத்தப்பட்ட கட்டணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீள வழங்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

October 6, 2026
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!
செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!

October 6, 2026
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

October 6, 2026
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!
செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!

October 6, 2026
சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்
சினிமா

சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்

October 6, 2026
தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி
செய்திகள்

தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி

October 6, 2026
Next Post
சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு