Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு புதுப்பாலத்தின் தற்காலிக கட்டுமானம் நிறைவு; பாதுகாப்பு உறுதியானதும் மக்கள் பாவனைக்கு திறக்க உத்தரவு!

மட்டக்களப்பு புதுப்பாலத்தின் தற்காலிக கட்டுமானம் நிறைவு; பாதுகாப்பு உறுதியானதும் மக்கள் பாவனைக்கு திறக்க உத்தரவு!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரின் பிரதான போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக விளங்கும் புதுப்பாலத்தின் சேதமடைந்த பகுதிக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் புதுப்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடத்தின் ஊடான போக்குவரத்து முழுமையாகத் தடைசெய்யப்பட்டதால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒருங்கிணைப்பிலும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியின் வழிகாட்டலிலும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலையீட்டின் மூலம் அவசர அடிப்படையில் பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிரந்தர புதிய பாலம் அமைப்பதற்கான நிதி மற்றும் நிர்வாக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக மக்கள் பாவனைக்கு திறந்துவிடுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியல் பிரிவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், நிரந்தர பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை இலகுரக வாகனங்களின் போக்குவரத்தை சீராக முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்களும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

October 8, 2026
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!

October 8, 2026
பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
செய்திகள்

பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!

October 8, 2026
27 மாத விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு; நீதவான் கோசல சேனாதீர மீண்டும் பணியில்!
செய்திகள்

27 மாத விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு; நீதவான் கோசல சேனாதீர மீண்டும் பணியில்!

October 8, 2026
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

October 8, 2026
14ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்; புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம்
செய்திகள்

14ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்; புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம்

October 8, 2026
Next Post
இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!

இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு