Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மோதலில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 29 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் போது, காயமடைந்த கைதிகள் தம்மை கட்டுவெல்லேகம சுரேஷின் தரப்பினரே தாக்கியதாக தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும், காயமடைந்த சில சிறைச்சாலை அதிகாரிகள் இன்னும் வாக்குமூலம் வழங்கும் உடல்நிலையில் இல்லாத காரணத்தால், அவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உயிரிழந்த இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதல் நிலை சிறைச்சாலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், ஏனைய உயிரிழந்த சிறைச்சாலை காவலர்கள் சார்ஜன்ட் பதவிக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு காரணங்களால் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்து கைதிகளும் இன்று வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சார்ஜன்ட் கமகே உபாலி பின்னர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று கம்புறுபிட்டியவில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அத்துடன், மோதலில் உயிரிழந்த சார்ஜன்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் அம்பகஹவெவ பொது மயானத்தில் நடைபெற்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்
செய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்

August 25, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026
மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது
செய்திகள்

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது

August 25, 2026
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
செய்திகள்

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

August 25, 2026
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

August 25, 2026
சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு
காணொளிகள்

சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

August 25, 2026
Next Post
“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!

“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு