Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய மூன்று அரச நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி.யின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் அமைந்துள்ள தனது காரியாலயத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மின்சாரக் கட்டண நிலுவை காரணமாக மின்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சில சந்தர்ப்பங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்படாமலேயே துண்டிக்கப்பட்டதாகக் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு, அதற்கான கொடுப்பனவுகள் பெறப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, ஆங்கிலத்தில் அனுப்பப்படும் குறுந்தகவல்களைப் புரிந்துகொள்ள முடியாத முதியவர்களை இலக்காகக் கொண்டு இந்த முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், இதுகுறித்து மின்சார சபை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், நிலுவைக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரும் சேவையை மீளப் பெற பொதுமக்கள் கட்டணப் பற்றுச்சீட்டுடன் நேரில் வருமாறு அதிகாரிகள் வற்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார். இணைய வழியில் கட்டணத்தை உறுதிப்படுத்தும் வசதி உள்ள நிலையில், மக்களை தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாக்காமல் தொலைபேசி மூலமே சேவையை மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் காணப்படும் குறைபாடுகளே நகரில் டெங்கு பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வீதிகள் மற்றும் வடிகால்கள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும், குப்பை அகற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்காமல், பிற செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்கால தேர்தல்களில் போலியான வாக்குறுதிகளை நம்பாமல், மக்களுக்கு உண்மையாக சேவை செய்யக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்
செய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்

August 25, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026
மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது
செய்திகள்

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது

August 25, 2026
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
செய்திகள்

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

August 25, 2026
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

August 25, 2026
சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு
காணொளிகள்

சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

August 25, 2026
Next Post
2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு