Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!

மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் தொடர்பான தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தகவலின்படி, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்காகக் கொண்ட கடற்படை நடவடிக்கைகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மத்திய கிழக்கு கடல் பிராந்தியத்தில் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஈரானின் இராணுவத் திறன்களை பலவீனப்படுத்தும் நோக்கில் வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெற்குப் பகுதிகளான பண்டர் அப்பாஸ், சிரிக் மற்றும் கேஷ்ம் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பதிலடியாக குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்திருந்தது.

அதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடருமானால், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை

October 14, 2026
சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!
செய்திகள்

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!

October 14, 2026
பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

October 14, 2026
ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

October 14, 2026
சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்
செய்திகள்

சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்

October 14, 2026
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!

October 14, 2026
Next Post
கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு