Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவதூறு பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி அரசுக்கு ஆதரவான தரப்புகளும், விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசின் சில முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களில் சிக்கியுள்ளதாகவும், அது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், சமூக ஊடகங்கள் அல்லது நாடாளுமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, அவற்றை நிரூபிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சவால் விடுப்பதாகவும் பசன் கஸ்தூரி தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
Next Post
நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு