விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை நேரடியாகக் கொள்வனவு செய்து நியாயமான விலையை உறுதி செய்யும் நோக்கில், நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.
“உபகண்டி விவசாயிகள் கூட்டமைப்பு லிமிடெட்” மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் ஊடாக, இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நேரடி கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.








