அலவத்துகொட, படுகொட பகுதியில் வீட்டு நிர்மாணப் பணியின் போது மண்மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில் அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்தபோது திடீரென மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, குறித்த நபர் மீட்கப்பட்டு உடனடியாக அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








