Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இவர்கள், திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி தானிஷ் அலி, அமல் சாலிந்த (ஆர்மி அமில), உதயங்க குமார மற்றும் கொஸ்வத்தே மஹாநாம தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட பிணைதாரர்களுக்கு அறிவித்தல் வழங்குமாறும், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் எந்தனி வேரங்க புஷ்பிக த சில்வா உள்ளிட்ட 13 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கோட்டை பொலிஸார் பலர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு