Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடொன்றில் மூன்று இலங்கையர்கள் மரணம்; தப்பியோடிய கொலையாளிகள்!

வெளிநாடொன்றில் மூன்று இலங்கையர்கள் மரணம்; தப்பியோடிய கொலையாளிகள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செந்தூல், ஜாலான் பெர்ஹெண்டியன் கம்பங் கோவில் ஹிலிரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன் தினம் இரவு மூன்று இலங்கை ஆண்கள் கை, கால்கள் கட்டப்பட்டு தலையை பிளாஸ்ரிக்கால் மூடிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த கொலைகளுடன் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பொலிஸார் சென்றடைவதற்கு முன்னதாகவே இலங்கையைச் சேர்ந்த அவர்கள் தப்பியோடி விட்டதாக கோலாலம்பூர் பொலிஸ்தலைவர் கமிஷனர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் நான்கு மாடிக் கடை வீதியில்
உள்ள ஒரு வீட்டில் சண்டை நடந்ததாக பொதுமக்களிடமிருந்து பொலிஸாக்கு அழைப்பு வந்தது.
அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் மூன்று ஆண்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் அவ்வீட்டின்களஞ்சிய அறையில், அவர்களின் வலது கைகள் மற்றும் கால்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தலைகள் பிளாஸ் ரிக்கால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன. அவர்களில் ஒருவரின் சடலம் நிர்வாணமாக காணப்பட்டது.

வீட்டைச் சோதனை செய்ததில், 40 வயதுடைய இலங்கைத் தம்பதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தமை
தெரியவந்தது. பலியான மூன்று பேரில், அந்த தம்பதியின் 20 வயது மகனும் உள்ளடங்குகிறார்.
இலங்கை தம்பதியர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்.

கொல்லப்பட்ட ஏனைய 2 இலங்கை இளைஞர்களும் அந்த வளாகத்தில் அறையொன்றை வாடகைக்கு பெற்று
தங்கியிருந்தவர்கள்.கொல்லப்பட்ட மூவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவர்கள் . இந்த படுகொலையில் முக்கிய சந்தேகநபர்கள் இருவர் தப்பியோடிய வர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்துகத்தி ஒற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் இருவரும், கொலையுண்ட ஒரு இளைஞனின் பெற்றோருடன் பழகிய வர்கள். ஆறு மாதங்களாக அவர்கள்அறிமுகமான நண்பர்களாக இருந்த வர்கள். 2 நாட்களாக அந்த வீட்டில் தங்கிருந்துள்ளனர்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

July 23, 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!

July 23, 2026
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

July 23, 2026
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
Next Post
இலங்கையில் ஐயோரா மாநாடு!

இலங்கையில் ஐயோரா மாநாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு