Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை மீறி இரத்தப் பரிசோதனைக்காக கூடுதல் தொகை வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.400 கட்டணத்திற்குப் பதிலாக ரூ.550 வசூலித்திருந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு ஜூலை 28ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது.

அதேவேளை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை, 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!

அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு