பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பகுதிகளுக்கும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மறுஅறிவித்தல் வழங்கப்படும் வரை குறித்த கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








