முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டு வந்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








