கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் உள்ள நீரேரியில் குடும்பத்தினர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஏழு வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காக குறித்த குடும்பத்தினர் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களது தந்தை மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 52 வயதுடைய நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.








