தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சுமார் 17 மில்லியன் மக்களையும் பழைய தேசிய அடையாள அட்டை முறையிலிருந்து புதிய டிஜிட்டல் அடையாள முறைமைக்கு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








