ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, குறித்த விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ இன்று காலை முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







