Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாகரை வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா
சூறையாடி சொத்து குவித்துள்ளார் எனவே சூறையாடிய காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு பூராகவும் சுகாதார ஊழியர்கள் ஒரே சீருடையில் கடமையாற்றி வருகின்றனர். கல்முனை வைத்தியசாலை சீருடை பிரச்சனை நிர்வாக மட்டத்தில் சுமூகமாக முடிக்க வேண்டிய பிரச்சனை ஆனால் இதனை ஒரு இனவாத போக்குள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பூதாகரமாக்கி கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை கொண்டு வந்து அரபு இராச்சியமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்தவிடாது இன்று வரை தடுத்து இனவாத விஷத்தை காட்டி வருகின்ற இவர் கிழக்கை அரபு இராஜ்சியமாக கொண்டுவருவதற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீருடை பிரச்சனை அதன் பிரதிபலன் தான் கல்முனையில் இஸ்லாமாபாத் நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த விடாதற்கு காரணம்.

இவ்வாறு தமது அரசியல் இருப்புக்கள் தக்கவைப்பதற்கு இன துவேசத்தை கக்கி வருகின்றார். இந்த பிரச்சனை சுகாதார மட்டத்தில் தீர்த்து கொள்வார்கள் என்பதை அவர் விளங்கி கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் உறவை பிரிக்க வேண்டாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களில் ரவுசரை கழற்றினால் எல்லாம் தெரியும் என கூறுகிறார் வைத்தியர் சுகுணன் ரவுசரை கழற்ற சொல்ல வில்லை இலங்கை பூராகவும் ரவுசர் இல்லாமல் தான் வேலை செய்கின்றனர் ஏதாவது தெரிகிறதா ? ஹக்கீமுக்கு மட்டும் ரவுசர் கழட்டினால் தெரிகிறது. இது தமிழ் பெண்கள் மீது முஸ்லிம் பெண்கள் கோபத்தை கொண்டு வரும் எனவே பன்பாக கதைக்க வேண்டும்.

நான் தமிழ் முஸ்லீம் சிங்களம் என பார்த்தது இல்லை யார் பிழை செய்தாலும் பிழை பிழைதான் எனவே கிழக்கு மாகாணம் ஒரு அரபு இராஜ்சியமாக மாற இடம் கொடுக்க முடியாது.

அதேவேளை வாகரை காரைமுனையில் தமிழர்களின் பூர்வீக இடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, மற்றும் ரவூப் ஹக்கீம் கடந்த 3 தினங்களுக்கு முன் சென்று அது முஸ்லிம்களின் பாரம்பரிய இடம் என அதற்கு போலி ஆவணங்களை தயாரித்து, அரச காடுகளை அழித்து ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர். இதற்கு வனபரிபாலன திணைக்களம் உடந்தையாக இருக்கின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

முஸ்லிம் மக்களுக்கு காணி தேவை என்றால் அரசாங்கத்துடன் பேசி அரச அதிபர், பிரதேச செயலாளர்களுடன் பேசி மக்களுக்கு கொடுப்பது வேற விடையம் ஆனால் அதை விட்டு போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர். காடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இவ்வாறே எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவும் அவரது மகனும் ஹய்ரா பவுண்டேஷன் என்ற அவர்களது பவுண்டேஷன் ஊடாக கதிரவெளியில இராமர்தீவு, வாகரையில் நடுத்தீவு, காயங்கேணி புல்லாவிபகுதில் 100 ஏக்கர், மாங்கேணி உட்பட வாகரை பிரதேசத்தில் பல ஏக்கர், எருமைத்தீவு 200 ஏக்கர், புனானையில் 400 ஏக்கர் என அரச காணிகளை சூறையாடியுள்ளனர்.

அதுமட்டுமல்ல வாழைச்சேனையில் நெல் சந்தைப்படுத்தும் கட்டிடத்தை அடியோடு அழித்து ஹய்ரா பவுண்டேஷனுக்கு பலவந்தமாக பெற்றுக் கொண்டு பிஸ்மில்லா காமன்ஸ், செரண்டிக் கம்பனியாகிய இரு கம்பெனிகளுக்கு விற்றுள்ளனர்.

இவ்வாறு இந்த சட்டவிரோதமாக சொத்து குவிப்பு எல்லாம் ராஜபக்ஷ கூட்டு அரசாங்க கால கட்டத்தில் சூறையாடப்பட்டது மட்டுமல்ல அதிகாரத்தை வைத்து கொண்டு காத்தான்குடியில் பேரீச்சம் பழ மரத்தை வைக்க கூடாது என்ற நீதவானை மாற்றிவிட்டு வேறு நீதவானை கொண்டுவந்து அந்த மரங்கள் பிடுங்க முடியாது என உத்தரவு போடுமாறு நீதவானுக்கு அழுத்தம் கொடுத்து உத்தரவு பெற்றுக் கொண்டார்.

எனவே சட்டவிரோதமாக ஹிஸ்புல்லா சூறையாடிய காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் நிதி குற்ற புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்வேன் என மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.