கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை, சிறுவனின் உறவினரான 18 வயதுடைய இளைஞர் ஒருவர் எடுக்க முற்பட்டுள்ளார். இதன்போது உழவியந்திரத்தின் பெட்டியில் நின்றுகொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி சிறுவன் நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








