Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

2 months ago
in செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணையவழி மூலம் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, ஒக்டோபர் மாதத்திற்குள் எவ்வித சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச துறை ஊழியர்களுக்காக இணையவழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

போக்குவரத்து பாதுகாப்பில் புதிய விதிமுறைகள்

இதேவேளை, நாடு முழுவதும் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்பு ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்கு 10 நாட்கள் விசேட பயிற்சி வழங்கவும், சாரதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரமான மற்றும் பாதுகாப்பான வாகனங்களை மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கென தனியான ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

October 6, 2026
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!
செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!

October 6, 2026
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

October 6, 2026
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!
செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!

October 6, 2026
தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி
செய்திகள்

தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி

October 6, 2026
பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!

October 6, 2026
Next Post
காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு