காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாயிஸ்’ என அழைக்கப்படும் முகமது பாயிஸுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையைப் பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பலீல் உள்ளிட்டோரின் கொலைச் சம்பவங்களுடன் முகமது பாயிஸுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







