வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணியில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுமார் 4 பரப்பு காணியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானம், பிரதேச சபையின் அறிவுறுத்தலையடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்போது மறைப்புச் செய்து மீண்டும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், கட்டுமானத்தை நிறுத்துமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், அனுமதி பெறாமல் பணிகள் தொடர்ந்தால் நீதிமன்றத்தை நாட சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.







