Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

41 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காக பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்காகவே அவர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அண்மையில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.

இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தது. இருப்பினும், அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை.

தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வேறு ஒரு திகதியை வழங்குமாறும் ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய, இன்று அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி விசாரணைக்கு தேவையான வாக்குமூலத்தை வழங்கவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிண்ணியாவில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு
செய்திகள்

கிண்ணியாவில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு

August 31, 2026
பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு
உலக செய்திகள்

பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு

August 31, 2026
இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமுல்
செய்திகள்

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமுல்

August 30, 2026
இஸ்லாமிய நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி அழைப்பு
உலக செய்திகள்

இஸ்லாமிய நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி அழைப்பு

August 30, 2026
புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன
செய்திகள்

புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன

August 30, 2026
பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்
செய்திகள்

பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்

August 30, 2026
Next Post
பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு

பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு