Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு

பிரான்சில் பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்பு

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18ஆவது வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ‘இம்பாஸ் மார்ட்டோ’ (Impasse Marteau) பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சாரதி எவருமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்திக்குள் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் அகதித் தஞ்சம் கோரியதற்கான ஆவணங்களை வைத்திருந்தவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், சட்டபூர்வ வதிவிட ஆவணங்கள் எதுவும் இல்லாத 26 வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு, நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அகதிகள் மீட்கப்பட்ட பாரவூர்தி சென்-எ-மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் கதவுகள் திறந்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பாரவூர்தியும் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.

அந்த வாகனம் வாடகை வாகன சேவை வழங்கும் நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, மீட்கப்பட்ட அகதிகள் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் குறித்த பாரவூர்தியில் ஏற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அகதிகளை யார் ஏற்றிச் சென்றனர், அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

October 15, 2026
மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
செய்திகள்

மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

October 15, 2026
மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
Next Post
கிண்ணியாவில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு

கிண்ணியாவில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு