Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகக் குறிப்பிடப்படும் முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு இடம்பெற்று வருகிறது.

குறித்த கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, வழக்கு விசாரணையின்போது லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!
செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!

October 16, 2026
வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!
செய்திகள்

வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!

October 16, 2026
கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்
செய்திகள்

கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்

October 16, 2026
ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை

October 16, 2026
அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!
செய்திகள்

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!

October 16, 2026
ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

October 16, 2026
Next Post
ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு