மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (08) புன்னைச்சோலை காளி கோயிலில் இடம்பெற்றது. இந்நிகழ்வு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் ஜெய்ஸ்மனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுரேஷ்குமார் ஜெய்ஸ்மன், கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் மீண்டும் பயணிக்க உள்ளதாகவும், அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு முழுவதும் உள்ள அனைத்து மத தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதம் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பிரகாரமே, இன்று மட்டு புன்னைச்சோலை காளி கோயிலில் இந்த விசேட ஆசீர்வாத பூஜை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.









