Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

41 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும கொடுப்பனவு மோசடி தொடர்பில், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்குள்ளான ஆறு ஆசிரியர்களும் பொகவந்தலாவை மற்றும் சாமிமலை பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் முதலே இவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, இதற்கான அறிவுறுத்தல்கள் ஹட்டன் கல்வி வலய அலுவலகம் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும மோசடி தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளிலேயே இவ் ஆறு ஆசிரியர்களுக்கும் மோசடியுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு மாவட்டச் செயலாளர் ஊடாகக் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இதே மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண் அதிகாரிகளின் விளக்கமறியலும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (08) ஹட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, இருவரும் இணையவழி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதுவரையிலான விசாரணைகளில் சுமார் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், மோசடித் தொகையும், சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களமான CID-யிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோணிசாமி பீட்டர் போல் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிதி முறைகேடு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!
செய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
Next Post
இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு