முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
மிக் (MiG) போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் FCID-க்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் இடம்பெறும் சுமார் 90 சதவீதமான விமானக் கொள்வனவுகள் கமிஷன் முறையிலேயே இடம்பெறுகின்றன என்றும், அதனைத் தவிர்க்க முற்பட்டால் விமானங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்றும் சொனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடம்பெற்ற மிக் போர் விமானங்கள் மற்றும் எயார்பஸ் விமானக் கொள்வனவுகள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், சொனால் பெர்னாண்டோவின் இந்தக் கருத்து அரசியல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் கவனம் பெற்றுள்ளது.








