Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!

அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!

54 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் சுமார் பாதியாகக் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2025ஆம் ஆண்டு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சத்து 39,917 பயனாளிகள் காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் அந்த எண்ணிக்கை 12 இலட்சத்து 51,522 ஆகக் குறைந்துள்ளது.

எனினும், இந்த எண்ணிக்கைக் குறைப்பு உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மறுகணக்கெடுப்பு மற்றும் பயனாளர்களின் தகுதி மறுசான்றிதழ் நடவடிக்கைகளே பயனாளிகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களுக்கான மறுசான்றிதழ் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அவை செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மிகவும் ஏழ்மையானோர், ஏழ்மையானோர், நலிவடைந்தோர் மற்றும் இடைநிலைப் பிரிவினர் என நான்கு பிரிவுகளுக்கு அஸ்வெசும நிவாரணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மிகவும் ஏழ்மையானோர் மற்றும் ஏழ்மையானோர் ஆகிய இரு பிரிவினருக்கு மாத்திரமே நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!
செய்திகள்

சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!

September 11, 2026
மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
செய்திகள்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

September 11, 2026
கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ
செய்திகள்

கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
செய்திகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
இறுதிப்போரில் சீருடை அணியாத போராளிகள் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கருத முடியாது; சவேந்திர சில்வா
செய்திகள்

இறுதிப்போரில் சீருடை அணியாத போராளிகள் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கருத முடியாது; சவேந்திர சில்வா

September 11, 2026
Next Post
மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு