Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா; மீண்டும் கிண்ணத்தை வாங்க மறுப்பு

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா; மீண்டும் கிண்ணத்தை வாங்க மறுப்பு

44 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும், போட்டியின் முடிவில் ஆசியக் கிரிக்கெட் சபையின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி மறுத்துவிட்டது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று (13) டுபாயில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது. அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணிக்கு வலுவான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.

ஷபாலி வர்மா 68 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 59 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும், அவர்களின் விக்கெட்டுகளுக்குப் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் பெரியளவில் சோபிக்கவில்லை.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மிதாலி அயோதா, சமதி அத்தபத்து மற்றும் சமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்மூலம் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!
செய்திகள்

கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!

September 14, 2026
வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!
செய்திகள்

வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!

September 14, 2026
ஊர்காவற்துறை நீதிமன்ற சாட்சி மீது வாள்வெட்டு தாக்குதல்; நால்வர் கைது
செய்திகள்

ஊர்காவற்துறை நீதிமன்ற சாட்சி மீது வாள்வெட்டு தாக்குதல்; நால்வர் கைது

September 14, 2026
புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
Next Post
வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!

வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு