மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கொழும்பு மற்றும் துபாய் இடையிலான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2026 செப்டம்பர் 6ஆம் திகதி முதல் இந்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அதன் தாக்கம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் ஃபிட்ஸ் ஏர் தெரிவித்துள்ளது.
தற்போதைய திட்டமிடலின்படி, கொழும்பு–துபாய் விமான சேவையை 2026 நவம்பர் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், விமான சேவை மீள ஆரம்பிக்கப்படும் திகதி, அப்போது நிலவும் பிராந்திய சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பொறுத்தே இறுதி செய்யப்படும் என ஃபிட்ஸ் ஏர் மேலும் தெரிவித்துள்ளது.







