ராஜபக்ஷர்களிடம் இனவாதம் இல்லை என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சிறந்த சான்று என பொதுஜன பெரமுன உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடக்கு – கிழக்கில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷர்கள் தொடர்பில் இனவாதக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அர்ச்சுனா இராமநாதனுடன் இணைந்து செயற்படுவது அதற்கு மாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








