சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் சூழலைக் கருத்திற் கொண்டு, அங்குள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவசர எச்சரிக்கை சமிக்ஞைகள் பெறப்படும்போது கட்டடங்களுக்குள் ஜன்னல்கள், கண்ணாடிகளிலிருந்து விலகி இருக்கவும்.
வெளியில் இருந்தால் அருகில் உள்ள உறுதியான கட்டடத்தில் தஞ்சமடையவும். மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கவும். வாகனங்களை ஓரமாக நிறுத்தவும்.
நிகழ்வுகளைப் படம் பிடிப்பதையோ, சமூக வலைதளங்களில் பகிர்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்.
அவசர எண்கள்:
மக்கா, மதினா: 911
ஏனைய பகுதிகள்: 998
இலங்கைத் தூதரகம்: 056 098 6671








