புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
நேற்று (16) நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்ற போதிலும், அனைத்து புகையிரதங்களும் தற்போது திட்டமிடப்பட்டுள்ள நேரத்திற்கேற்ப தங்களது தொடக்க நிலையங்களில் இருந்து புறப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.







