அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (05) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞரை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அவரது உடமையில் இருந்து 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








