Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு கண்காணிப்பு கமராக்கள் மூலம் தண்டம்; ஆளுநர் பணிப்பு

பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு கண்காணிப்பு கமராக்கள் மூலம் தண்டம்; ஆளுநர் பணிப்பு

54 minutes ago
in மட்டு செய்திகள்

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக தண்டம் அறவிடும் நடவடிக்கையை வடக்கு மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (06) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையினால் கண்காணிப்புக் கமராக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் இதுவரை சுமார் 8 இலட்சம் ரூபா தண்டத் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக 852 வேலைத்திட்டங்கள் சுமார் 6,955 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தரோடைக்குளத்தில் சுமார் 28,000 கன மீற்றர் மண் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளதாகவும், மாகாணத்தின் பல்வேறு உள்ளூராட்சி மன்றப் பகுதிகளில் குளங்கள் மற்றும் வாய்க்கால்களை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களுக்கு 2027ஆம் ஆண்டு முதல் குடிபுகு சான்றிதழை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் குடிபுகு சான்றிதழ் பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டட விஸ்தரிப்புகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகர மையம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் அனுமதியற்ற வீதியோரக் கடைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர சபை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனுடன், வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நாளின் இறுதியாக புறப்படும் பேருந்துகளின் சேவை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பது தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதற்காக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்தி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
Next Post
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு