Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா

மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா

18 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக 1987, 1988ஆம் ஆண்டுகளில் கலவரங்களில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினர், தமிழர்களுக்கு மாகாணசபை அதிகாரங்களை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறாது என்றும், நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், வடக்கில் நான்கு மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் மாகாணசபைத் தேர்தல் நடைபெறாது என்பது தெளிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்துடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அதிகாரங்களையும், நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அவர் விமர்சித்தார். தற்போதைய அரசியல் சூழலில் நாடாளுமன்றத் தேர்தலோ ஜனாதிபதித் தேர்தலோ நடைபெறாது என்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், அதற்காக ‘ரியல் பவர்’ என்ற நடைமுறையைக் கொண்டுவந்து அவரை ஒருபோதும் விடுவிக்காத வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்காலத்தில் இலங்கைக்கு புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதியும் பதவியில் நீண்டகாலம் நீடிக்கமாட்டார் எனத் தெரிவித்தார்.

தாம் ஒருபோதும் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை எனத் தெரிவித்த இரா. அர்ச்சுனா, சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது கட்சிகளில் வடக்கு, கிழக்குப் பொறுப்புகளை ஏற்குமாறு தம்மிடம் கோரியதாகவும் கூறினார்.

கொழும்பில் சுயேச்சையாகப் போட்டியிட்டும் வெற்றிபெறக்கூடிய அரசியல் பலம் தமக்கு இருப்பதாகவும், தமது கட்சியில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதாகவும், கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாமல் ராஜபக்ஷவின் கட்சியில் இணையப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், அரசியலில் எதிரியின் எதிரி நண்பன் என்ற இராஜதந்திர அணுகுமுறையைப் பின்பற்றுவதாகவும், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டின் காரணமாக நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பதாகவும் விளக்கமளித்தார்.

எதிர்ப்பு அரசியலால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது எனத் தெரிவித்த அவர், தமிழ் தேசியவாதத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

தனது தந்தை மாவீரர் எனவும், கார்த்திகை மாத உரைகள் மாவீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டவை எனவும் தெரிவித்த அவர், அரசியல் என்பது கட்சிகளுடன் இணைந்து பதவிகளைப் பெற்றுக்கொள்வதல்ல; அது இராஜதந்திரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் கூறினார்.

தமிழ் அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக ராஜபக்ஷ குடும்பத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய இரா. அர்ச்சுனா, தாம் எந்தவொரு கட்சியுடனும் இணையப்போவதில்லை என மீண்டும் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

November 18, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

November 18, 2026
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!
உலக செய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

November 18, 2026
நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 18, 2026
உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!

November 18, 2026
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

November 18, 2026
Next Post
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.