தென் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள வனுவாட்டு தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இன்று (சனிக்கிழமை) 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது பொருட்சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் சுனாமி அபாயம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.








