ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஹோமாகம பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரினால் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவலில் இருந்த சந்தேகநபரின் மரணம் தொடர்பில், கடமையில் தவறிழைத்தமை அல்லது பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமை இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த பொலிஸ் பரிசோதகரைப் பணி இடைநீக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







