Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பண்ணையாளர்களுக்கு யார் பதில் சொல்வது!

பண்ணையாளர்களுக்கு யார் பதில் சொல்வது!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் கிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஒரு பிரதேசமாகும்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு வருவாயை இந்த பால் உற்பத்தியின் மூலம் பண்ணையாளர்கள் ஒவ்வொரு வருடமும் ஈட்டிக்கொடுத்து வருகின்றார்கள். இதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமாகவுள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதியில் வாழும் தமிழ் பாற்பண்ணையாளர்கள் ஒவ்வொருநாளும் பன்னிரெண்டாயிரம் லீட்டர் பாலினை உற்பத்தி செய்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக மூன்று இலட்சம் லீட்டர் பாலினை பண்ணையாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இவர்களின் கால்நடை வளர்ப்பு தொழில் என்பது பாரம்பரியமாக அந்த பகுதியில் அவர்கள் செய்து வரும் தொழில். அவர்களின் மூதாதையர்கள் செய்து வந்த அதே தொழிலை இவர்களும் தங்களின் வாழ்வாதாரத்துக்காக செய்து வருவதோடு பாற்பண்ணை வருவாய் மூலம் சொந்த பிரதேசத்துக்கும் மொத்த நாட்டுக்கும் வளம் சேர்க்கின்றார்கள்.

இன்று அந்த மக்களின் வாழ்வாதாரத்தில் அடி விழுந்திருக்கிறது. சிங்கள சமூகத்தை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் அரச ஆதரவோடு மயிலத்தமடு, மாதவனை விவசாயிகள் கால்நடைகளை மேய்த்து வரும் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து குடியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் . இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு இலங்கை மகாவலி அதிகாரசபை ,இலங்கை இராணுவம் , பௌத்த பிக்குகள் ,கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆகியோர் ஆதரவு வழங்குகிறார்கள்.

மேய்ச்சல் நிலங்களை விட்டு தமிழ் பண்ணையாளர்களை வெளியேற்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது.இதுவரை பண்ணையாளர்களின் பல நூற்றுக்கணக்கான மாடுகள் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டுள்ளன. பண்ணையாளர்கள் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் எனவும், குடியேற்ற வாசிகள் அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் ஏற்கனவே நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. இருந்த போதிலும் அந்த நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தொடர்ந்தும் பண்ணையாளர்களின் வசமுள்ள மேய்ச்சல் நிலங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.
கொட்டில்களை அமைக்கிறார்கள் , காடுகளை அழிக்கிறார்கள் , விகாரை அமைக்கிறார்கள் இவை அனைத்துக்கும் இலங்கை மாகாவலி அதிகாரசபை ஆதரவு வழங்கி வருகிறது.

இந்நிலையில் எந்த ஆதரவும் இல்லாத தமிழ் பண்ணையாளர்கள் எல்லா வழிகளிலும் எதிர்த்து போராடி பலனேதும் இன்றி இன்றோடு 18 வது நாட்களாக சித்தாண்டி பகுதியில் வீதியில் கூடாரம் அமைத்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறும் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறும் குரல் கொடுக்கிறார்கள் . இதுவரை யாரும் ஏன் என்று கேட்க்கவில்லை.

பொருளாதார நெருக்கடியில் நாடு மோசமான நிலையில் உள்ளது சரிந்து போன நாட்டை நிமிர்த்த போகிறோம், உற்பத்தி துறையை தூக்கி நிறுத்தப்போகிறோம் என்று கூறிக்கொண்டு உலகத்திடம் இலங்கை அரசு கடன் வாங்கிக்கொண்டு,எதோ செய்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதோடு மட்டுமல்லாமல் இந்த நாட்டின் பஞ்சம் போக்கவும் உழைக்கும் மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் கால்நடைகளை கொல்லவும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு ஆதரவு வழங்குகின்றது.

தமிழர் நிலங்களை அழிக்க வேண்டும் அந்த மண்ணை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கவேண்டும் என்ற சிங்கள பேரினவாத மன நிலையே இன்று மயிலத்த மடு, மாதவனை பிரதேசம் மீது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு காட்டி நிற்கின்றது. பசுக்களை கொல்லக்கூடாது என்று பௌத்த தர்மம் சொல்கிறது. ஆனால் அந்த புனித பௌத்த தர்மத்தை பின்பற்றும் சிங்கள குடியேற்றவாசிகள் தமிழர்களுடையை சொத்து என்ற , ஒரே காரணத்துக்காக வாய் பேசமுடியாத அந்த ஜீவன்களையும் விட்டு வைக்காது சுட்டும், வெட்டியும் கொன்றும் தமது இனவெறியை காட்டி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலைமைக்கு யார் பொறுப்பேற்பது? அல்லது பதில் சொல்வது என்பது இன்னுமே எவருக்கும் புரியாத விடயமாக உள்ளதோடு, இந்த பாற்பண்ணையாளர்களின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பதுதான் எமது அனைவர் முன்னாலும் எழுந்துள்ள கேள்வி?
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இராஜாங்க அமைச்சர்கள் இந்த பாற்பண்ணையாளர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
தேங்காய் திருடியவர் மீது காவலாளி துப்பாக்கிச் சூடு!

தேங்காய் திருடியவர் மீது காவலாளி துப்பாக்கிச் சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.