Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய பொருளாதார மற்றும் சந்தை நிலைமைகளில் முறையான எரிபொருள் விலைச் சூத்திரமின்றி நாட்டில் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாது என இலங்கை கனிப்பொருள் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ‘DGI Talk’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுடன் கடந்த காலங்களில் செய்துகொள்ளப்பட்ட 20 வருட ஒப்பந்தங்கள் காரணமாக, அரசாங்கத்தினால் தன்னிச்சையாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனவும், அவ்வாறு குறைத்தால் ஏற்படும் நட்டத்தை மூன்று மாதங்களுக்குள் நிறுவனங்களுக்கு ஈடுசெய்ய வேண்டிய சட்டப்பூர்வ பொறுப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்கு 71 ரூபாய் நட்டம் ஏற்படுவதாகவும், டீசல் லீற்றர் ஒன்றுக்கு 53 ரூபாய் நட்டத்தை கூட்டுத்தாபனம் எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த மாதம் எரிபொருள் மானியத்திற்காக அரசாங்கம் 41 பில்லியன் ரூபாயை ஒதுக்கியதாகவும், அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை நாட்டின் எரிபொருள் தேவைக்கான இறக்குமதி கட்டளைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 50,000 பீப்பாய்களிலிருந்து 100,000 பீப்பாய்களாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!
செய்திகள்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!

November 8, 2026
சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!
செய்திகள்

சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!

November 8, 2026
தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்

November 8, 2026
நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுராதபுரத்தில் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது!
காணொளிகள்

நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுராதபுரத்தில் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது!

November 8, 2026
திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

November 8, 2026
கனடாவில் 2 இலட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கத் திட்டம்!
உலக செய்திகள்

கனடாவில் 2 இலட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கத் திட்டம்!

November 8, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு