தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நுகர்வோருக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் நேற்று (08.11.2026) விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொது சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடிப் பரிசோதனையின் போது, அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடைகள் மற்றும் கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டன.
இப்பரிசோதனை நடவடிக்கையின் போது, இறந்த நிலையில் கொண்டுவரப்பட்ட கோழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இத்தகைய விசேட பரிசோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், சுகாதார விதிகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







