குருணாகல் மாவட்டத்தின் வாரியபொல – அவுல்லேகம பகுதியில் ஏற்பட்ட மின்சார விபத்தில் வயோதிபத் தம்பதியினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று(10) காலை மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த வீதிவிளக்கை அணைக்க முயன்றபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 61 வயதுடைய கணவர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது 60 வயதுடைய மனைவி, கணவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்றுள்ளார்.
எனினும், அவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது மற்றொருவரும் உயிரிழந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







