Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்திலும் மெட்ரோ நகர்ப்புற சொகுசுப் பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான வீதிகளை அடையாளம் காணுதல், தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் இன்று (10) இடம்பெற்றன.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில், இச்சேவையை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடலும் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கொழும்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மெட்ரோ பேருந்துச் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்துச் சேவையை ஊக்குவிப்பதன் மூலம் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 2029ஆம் ஆண்டு வரையிலான தேசிய விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் மெட்ரோ பேருந்துச் சேவையை விரிவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!
செய்திகள்

வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!

November 11, 2026
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 11, 2026
மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!

November 10, 2026
மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!
செய்திகள்

மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!

November 10, 2026
ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!
செய்திகள்

ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!

November 10, 2026
2026 இறுதிக் காலாண்டில் மின் கட்டணத்தில் மாற்றமில்லை!
செய்திகள்

2026 இறுதிக் காலாண்டில் மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

November 10, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு